Welcome to Jettamil

வெளிநாட்டிலிருந்து இலங்கை வருவோருக்கு முக்கிய அறிவித்தல்!

Share

வெளிநாட்டு பயணிகள் இலங்கை வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிக பயணக்கட்டுப்பாடு எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் நீக்கப்படவுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த 14 நாட்களுக்குள் இலங்கையிலிருந்து இந்தியா சென்றவர்கள் மீண்டும் நாடு திரும்ப தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமானசேவைகள் அதிகார சபைத் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்தார்.

அவ்வாறே, இலங்கை வரும் விமானமொன்றில் 75 பயணிகள் மாத்திரமே இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபை தெரிவித்துள்ளது

இதேவேளை, இலங்கை வரும் வெளிநாட்டுப் பயணிகள் அனைவரும் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலத்தை நிறைவுசெய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை