Welcome to Jettamil

அடை மழை காரணமாக யாழ்ப்பாணத்தில் 127 குடும்பங்கள் பாதிப்பு!

Share

தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை யாழ்ப்பாணத்தில் 127 குடும்பங்களைச் சேர்ந்த 447பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கோப்பாய் பிரதேச செயலர் பிரிவில் 59 குடும்பங்களைச் சேர்ந்த 197 அங்கத்தவர்கள் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை பருத்தித்துறை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பொலிகண்டி பகுதியில் 47 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் அதே பகுதியில் ஒன்பது குடும்பங்களைச் சேர்ந்த 36பேர் ஒரு பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் , உடுவில் பிரிவில் 2 குடும்பங்களைச் சேர்ந்த 9பேரும், சாவகச்சேரி பிரதேச செயலர் பிரிவில் 15 குடும்பங்களைச் சேர்ந்த 63 பேரும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் 4 குடும்பங்களைச் சேர்ந்த 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை