2022 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்தின், 2022ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம், நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால், நொவம்பர் 12ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
நவம்பர் 13ஆம் திகதி முதல் 22ஆம் திகதி வரை 7 நாட்கள் நடைபெற்ற, விவாதத்தை அடுத்து 22ஆம் திகதி மாலை இரண்டாவது வாசிப்பின் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டு 93 மேலதிக வாக்குகளால்நிறைவேற்றப்பட்டது.
அதன்பின்னர் நவம்பர் 23ஆம் திகதி முதல் அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதம் இடம்பெற்று வந்தது.
இன்று மாலையுடன் நிறைவடையும் இந்த விவாதத்தை அடுத்து, மாலையில் வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.