30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான, கொவிட் 19 தடுப்பூசியின் பூஸ்டர் டோஸ் இன்று முதல் அனைத்து மாவட்டங்களிலும் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
எந்தவொரு கோவிட்-19 தடுப்பூசி வகையின், 2 தடுப்பூசிகளை செலுத்தியவர்கள், 2வது தடுப்பூசி செலுத்தி, 3 மாதங்கள் கடந்த பின்னர், இந்த பூஸ்டர் டோஸ் வழங்கப்படவுள்ளது.
இதற்கென பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி பயன்படுத்தப்படும்.
30 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பூஸ்டர் தடுப்பூசிகளை ஒழுங்கமைக்கப்பட்ட மருந்தங்கள் மற்றும் மருத்துவமனைகள் மூலம் வழங்க ஏற்பாடு செய்யுமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் மருத்துவர் அசேல குணவர்தன பணிப்புரை விடுத்துள்ளார். இந்தப் பணிகளை மாவட்டம் தோறும் விரைவாக முன்னெடுக்குமாறும் அவர் பணித்துள்ளார்.