நாட்டில் மேலும் 4 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. அதன்படி, இலங்கையில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16742 ஆக அதிகரித்துள்ளது.
அதாவது, இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் அனைவரும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
இதேவேளை, இன்று மேலும் 29 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதையடுத்து, இலங்கையில் மொத்தமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 670570 ஆக அதிகரித்துள்ளது.