Welcome to Jettamil

டி20 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டது

Share

2020 உலகக் கோப்பைக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் தலைமை பொறுப்பு தசுன் ஷனக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தனுஷ்க குணதிலக்க, பாதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், சரித் அசங்க, பானுக ராஜபக்ஷ, தனஞ்சய டி சில்வா ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க, மஹிஷ் தீக்ஷன, ஜெஃப்ரி வண்டசே, சமிக்க கருணாரத்ன, துஷ்மந்த சமிர, லஹிரு குமார, டில்ஷான் மதுஷங்க, பிரமோத் மதுஷான் ஆகியோரும் இடம்பிடித்துள்ளனர்.

அஷேன் பண்டார, பிரவீன் ஜெயவிக்ரம, தினேஷ் சந்திமால், பினுர பெர்னாண்டோ மற்றும் நவிந்து பெர்னாண்டோ ஆகியோர் மேலதிக வீரர்களாக குழாமில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

இலங்கை அணி இரண்டாம் நாள் அவுஸ்திரேலியா செல்லவுள்ள நிலையில் மேலதிக வீரர்களான அஷேன் பண்டார மற்றும் பிரவீன் ஜெயவிக்ரம ஆகியோர் அணியுடன் புறப்படவுள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவினால் தெரிவு செய்யப்பட்ட இந்த அணிக்கு விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ரொஷான் ரணசிங்கவின் அனுமதியும் கிடைத்துள்ளது.

டி20 உலகக் கோப்பை 2022 ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை நடைபெறுகிறது.

தசுன் ஷனக – கேப்டன்
தனுஷ்க குணதிலக்க
பாத்தும் நிஸ்ஸங்க
குசல் மெண்டிஸ் – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்
சரித் அசலங்கா
பானுகா ராஜபக்ச – விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன்
தனஞ்சய டி சில்வா
வனிந்து ஹசரங்க
மகேஷ் தீக்ஷனா
ஜெஃப்ரி வாண்டர்சே
சாமிக்க கருணாரத்ன
துஷ்மந்த சமீர (உடற்தகுதிக்கு உட்பட்டது)
லஹிரு குமார (உடற்தகுதிக்கு உட்பட்டது)
தில்ஷான் மதுஷங்க
பிரமோத் மதுஷன்

காத்திருப்பு வீரர்கள்
அஷேன் பண்டார
பிரவீன் ஜெயவிக்ரம
தினேஷ் சண்டிமால்
பினுர பெர்னாண்டோ
நுவனிது பெர்னாண்டோ

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை