Friday, Feb 7, 2025

கிளிநொச்சி மாவட்டத்தில் படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது!

By kajee

கிளிநொச்சி மாவட்டத்தில் படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது!

கிளிநொச்சி மாவட்டத்தில் படைத்தரப்பு வசமிருந்த 40.9 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு விடுவிக்கப்பட்ட காணிகள் அதுசார்ந்த திணைக்களங்கள் மற்றும் மக்களுக்கு கையளிப்பதற்குரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்கதிபர் எஸ்.முரளீதரன் தெரிவித்தார்.

தொடர்ந்து இராணுவத்தினர் விடுவித்த கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரச காணியையும் மேலதிக அரசாங்க அதிபர் பார்வையிட்டார்.

ஊடகங்களுக்கு அவர் மேலும் கூறுகையில்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 3 பிரதேச செயலக பிரிவுகளில் 40.9 ஏக்கர் காணிகள் படையினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காணிகளை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் அல்லது பொதுமக்கள் உறுதிப்படுத்தி பிரதேச செயலகங்களுடன் தொடர்பு கொண்டு தமக்குரிய காணிகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு