Thursday, Jan 16, 2025

வடமராட்சி கிழக்கு கடலில் இருவர் கடற்படையால் கைது

By kajee

வடமராட்சி கிழக்கு கடலில் இருவர் கடற்படையால் கைது

வடமராட்சி கிழக்கு மணல்காடு கடற்பகுதியில் சட்டவிரோத தொழில் நடவடிக்கையில் ஈடுபட்ட இருவர் பருத்தித்துறை கடற்படையினரால் 11.03.2024 கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்பகுதியில் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக கடற்படையினர் தொடர் சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு வருவதாகவும் இதன் தொடர்ச்சியாகவே பருத்தித்துறை கடற்படையினர் வடமராட்சி கிழக்கு மணல் காடு கடற்பகுதியில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையில் ஒளி பாய்ச்சி மீன்பிடித்த இருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்கள் குடத்தனை பகுதியை சேர்ந்தவர்கள் எனவும், மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக உடமைகளுடன் இருவரும் யாழ்ப்பாண கடற்றொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு