Welcome to Jettamil

அபிவிருத்தி திட்டங்களுக்கு 946 மில்லியன் ரூபா செலவில் திட்டங்கள் முன்மொழிவு

Share

அபிவிருத்தி திட்டங்களுக்கு 946 மில்லியன் ரூபா செலவில் திட்டங்கள் முன்மொழிவு

யாழ். மாவட்டத்தின் இவ்வாண்டு 178 அபிவிருத்தி திட்டங்களுக்கு 946 மில்லியன் ரூபா செலவில் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் முன்மொழிவுக்கான திட்டங்கள் கோரப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் திருமதி நிக்லஸ்ப் பிள்ளை தெரிவித்தார்.

யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவர் கடற்றொழில் அமைச்சர் கே என் டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.

இதில் நீர்ப்பாசனம்,விவசாயம்,மீள் குடியேற்றம், ஊள்ளூராட்சி சபை,கமநல உற்பத்தி,கால்நடை வளர்ப்பு,தென்னை அபிவிருத்தி சபை,பிரதி மாகாண விவசாய திணைக்களம்,கல்வி,தேசிய வீடமைப்பு அதிகார சபை ஆகிய திணைக்களங்களுக்கான திட்டங்களுக்கு இவ்வாறான நிதி மூலம் அனுமதிக்காக முன்மொழியப்பட்டுள்ளது.

இதில் தமிழ் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சுமந்திரன், சிறிதரன், சித்தார்த்தன், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஆகியோரும் வடமாகாண அவைத்தலைவர் சிவஞானம், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் அ.சிவபாலசுந்தரன், ஜனாதிபதி செயலக வடமாகாண இணைப்பாளராக எல்.இளங்கோவன், மாவட்ட மேலதிக செயலாளர்.ம.பிரதீபன்,மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பணிப்பாளர்கள், ஊள்ளூராட்சி மன்ற செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள்,இராணுவ, பொலிஸ் அதிகாரிகள்,சமூக மட்டபிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை