முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு 95 ஒக்டேன் பெற்றோல் வழங்கப்படமாட்டாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
சில முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகள் அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக 95 ஒக்டேன் பெற்றோலை சேமித்து வைப்பதன் காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.இதேவேளை, இலங்கையில் 6,142 மெட்ரிக் தொன் 95 ஒக்டேன் பெற்றோல் மட்டுமே இருப்பதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பதிவொன்றில் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.