யாழ்ப்பாணத்தை நெருங்கும் வரலாறு காணாத பேரழிவு! 650 மி.மீ மழையினால் பெரும் ஆபத்து!
வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், யாழ்ப்பாணம் இதுவரை கண்டிராத அளவிலான பாரிய இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என யாழ். பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
யாழ். மாவட்டத்தில் சுமார் 650 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இது 1970-களுக்குப் பின்னர் ஜனவரி மாதத்தில் உருவாகும் மிகவும் வீரியமிக்க 21-வது தாழ்வு மண்டலமாகும்.
மிக மெதுவான வேகத்தில் (மணிக்கு 9 கி.மீ) நகர்வதால், மழை மேகங்கள் நீண்ட நேரம் நிலைத்து நின்று மழையை கொட்டும். குறிப்பாக ஜனவரி 9 மற்றும் 10 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் மிக மோசமான பாதிப்புகளைச் சந்திக்கும்.
மணிக்கு 60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். இதன் தாக்கம் தென்பகுதியைத் தாக்கிய ‘டித்வா’ புயலை விடவும் மிக மோசமான பேரழிவுகளை ஏற்படுத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
பயிர் நிலங்கள் முற்றாக நீரில் மூழ்கும் அபாயம் உள்ளதால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் இப்போதே பாதுகாப்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.





