Welcome to Jettamil

வவுனியாவில் அதிர்ச்சி: பொலிஸார் மீது லொறியை மோதிவிட்டுத் தப்பிய சாரதி கைது!

Share

வவுனியாவில் அதிர்ச்சி: பொலிஸார் மீது லொறியை மோதிவிட்டுத் தப்பிய சாரதி கைது!

வவுனியா, களுக்குன்னமடுவ பகுதியில் இன்று (24.01.2026) காலை கடமையில் இருந்த போக்குவரத்துப் பொலிஸார் மீது லொறியை மோதிவிட்டுத் தப்பிச் சென்ற சாரதி, இராணுவத்தினரின் உதவியுடன் அதிரடியாகக் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஏ-09 வீதியில் பொலிஸாரின் கட்டளையை மீறிச் சென்ற சிறிய ரக லொறி ஒன்றை, இரண்டு போக்குவரத்துப் பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து சென்றுள்ளனர்.

இதன்போது, குறித்த லொறியின் சாரதி வேண்டுமென்றே பொலிஸாரின் மோட்டார் சைக்கிள் மீது லொறியை மோதித் தள்ளியுள்ளார். இதில் அதிகாரிகள் இருவரும் தூக்கி வீசப்பட்டுப் படுகாயமடைந்தனர்.

விபத்தின் பின்னர் லொறியின் அடியில் மோட்டார் சைக்கிள் சிக்கிக்கொண்டதால், லொறியைக் கைவிட்டுச் சாரதி அருகிலிருந்த காட்டுப் பகுதிக்குள் தப்பியோடியுள்ளார்.

பூஓய பாலத்திற்கு அருகில் உள்ள இராணுவ முகாம் திசையை நோக்கி ஓடிய சந்தேகநபரை, அங்கிருந்த இராணுவத்தினர் துரத்திச் சென்று மடக்கிப் பிடித்தனர். பின்னர் அவர் மேலதிக விசாரணைக்காக இரட்டை பெரியகுளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

காயமடைந்த இரு பொலிஸ் அதிகாரிகளும் வவுனியா வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விபத்து தொடர்பான காட்சிகள் பின்னால் வந்த வாகனத்தில் இருந்த ஒருவரின் கைப்பேசியில் பதிவாகியுள்ளதுடன், அவை முக்கிய ஆதாரமாகக் கொள்ளப்பட்டுள்ளன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை