Welcome to Jettamil

வரலாற்றில் முதன் முறையாக இந்திய இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய யாழ் சிறுமி

Share

வரலாற்றில் முதன் முறையாக இந்திய இசை நிகழ்ச்சியில் வெற்றி வாகை சூடிய யாழ் சிறுமி

தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சியில் இடம்பெற்ற சரிகமபா இசை நிகழ்ச்சியில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த சிறுமி கில்மிஷா வெற்றிவாகை சூடியுள்ளார்.

குறித்த இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றானது நேற்று (17) பிரமாண்டமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து அசானி மற்றும் கில்மிஷா ஆகிய இரு சிறுமிகளும் கலந்து கொண்டார்கள். எனினும், இறுதிச் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை அசானி தவற விட்டிருந்தாலும் மலையக மக்களின் அடையாளமாக அவர் உலகளாவிய ரீதியில் பிரபல்யம் அடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சரிகமபா நிகழ்ச்சியில் இறுதி போட்டிக்கு செல்லும் 6 போட்டியாளர்களில் ஒருவராக கில்மிஷா தெரிவானார். இதனை தொடர்ந்து நேற்றய தினம் இடம்பெற்ற இறுதி சுற்றில் டைட்டில் வின்னராக தெரிவு செய்யபட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை