சோம்நாத் வானில் தெரிந்த அதிசயம்: 3,000 ட்ரோன்கள் உருவாக்கிய சிவ தாண்டவம்! பிரதமர் மோடி நேரில் தரிசனம்
சோம்நாத் கோவிலின் ‘சுவாபிமான் பர்வ்’ (Swabhiman Parv) விழாவை முன்னிட்டு, சுமார் 3,000 ட்ரோன்கள் பங்கேற்ற இந்தியாவின் மிகப்பெரிய வான்வெளி ஒளிக்காட்சி (Drone Show) நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
அதிநவீன தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கப்பட்ட 3,000 ட்ரோன்கள், வானில் பல்வேறு ஆன்மீக மற்றும் வரலாற்று வடிவங்களை உருவாக்கி பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்தன.
வான்வெளியில் சிவபெருமானின் தாண்டவக் கோலம், ஓம் (Om) சின்னம், திரிசூலம், சோம்நாத் கோவிலின் முப்பரிமாண (3D) உருவங்கள் தத்ரூபமாகச் சித்தரிக்கப்பட்டன.
வரலாற்றுப் பின்னணி: சோம்நாத் கோவில் மீதான படையெடுப்புகள் மற்றும் அதன் மீள் எழுச்சியின் 1,000 ஆண்டுகால வரலாற்றை விளக்கும் வகையில் இந்த ‘வான்வெளி கதைசொல்லல்’ (Aerial Narrative) அமைந்திருந்தது.
இந்தச் சிறப்பு நிகழ்ச்சியைப் பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் ஆகியோருடன் இணைந்து நேரில் கண்டு ரசித்தார். முன்னதாக அவர் சோம்நாத் கோவிலில் விசேட பூஜைகளையும் மேற்கொண்டார்.
“சோம்நாத் கோவில் இந்தியாவின் அசைக்க முடியாத நம்பிக்கையின் சின்னம்” எனப் பிரதமர் இதன்போது தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.












