Welcome to Jettamil

இன்னும் சில மணி நேரங்களின் உருவாகிறது புயல்

Share

தென்மேற்கு வங்காள விரிகுடாவிற்கு அருகில் ஆழமான காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று இரவு வரை யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 330 கிலோ மீற்றர் தொலைவில் வடகிழக்கே நிலைகொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்ட தகவலில்,

இது அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இந்த அமைப்பு இலங்கையின் வடக்கு கடற்கரைக்கு அருகில் உள்ள நாட்டிலிருந்து நகர்கிறது.

இது நாளை இந்தியாவின் வட தமிழக கடற்கரை வரையை நகர்ந்து, பின்னர் வடக்கு நோக்கி நகர்ந்து நாளை மறுநாள் தெற்கு ஆந்திரா பகுதியில் கரையை கடக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை