காலி உடுகம கல்வி வலயத்திற்குட்பட்ட கோனதெனிய கனிஷ்ட கல்லூரியைச் சேர்ந்த டபிள்யூ.எம்.ருவானி வசனா என்ற மாணவி பிறக்கும்போதே இரண்டு கால்களையும் இழந்த நிலையில் வெளியான சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளில் 7A B C சிறந்த பெறுபேறை பெற்று சாதனை படைத்துள்ளார்.
தனது பெறுபேறு தொடர்பில் ருவானி வாசனா கூறியதாவது, எவ்வளவு தடைகள் வந்தாலும் நான் கடுமையாக உழைத்தேன். உங்கள் கவலைகளை மறந்து வேலை செய்யுங்கள். அப்போதுதான் அனைவரும் வெற்றி பெற முடியும்.பாடசாலையின் அதிபர் ஆசிரியர்கள் எனக்கு நிறைய உதவினர்.
நண்பர்கள் என் சகோதர சகோதரிகளைப் போல எனக்கு உதவினார்கள். எங்கள் பாடசாலை இந்த ஆண்டு தேர்வில் மிகச் சிறந்த பெறுபேறுகளை பெற்றுள்ளது என்றார்.