Welcome to Jettamil

யாழில் பரபரப்பு : வாள்வெட்டு தாக்குதல் நடத்திய கும்பல் மீது துப்பாக்கி பிரயோகம் – Video

Share

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பகுதியில் அடையாளம் தெரியாத குழு ஒன்று மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் குறித்த வன்முறை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றதாக பொலிஸார் ,தெரிவித்துள்ளனர்.இதன்போது பொலிஸ் நிலையம் முன்பாக காவலில் ஈடுபட்டிருந்த பொலிஸார், தப்பி சென்றவர்களை பிடிப்பதற்காக வாகனத்தின் மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த இளைஞர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிசிரிவி காணொளிகளை கொண்டு பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்ற அதேநேரம் அப்பகுதியில் பலத்த பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த வன்முறைச் சம்பவத்தில் எங்களுக்கு தொடர்பில்லை என தெரிவித்து ஒருவர் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

https://twitter.com/i/status/1731855315996442791

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை