Welcome to Jettamil

இலங்கையில் தனது தாயைத் தேடும் டென்மார்க் வாழ் இலங்கை இளைஞன்: ஊடகங்கள் மூலம் உருக்கமான வேண்டுகோள்

Share

இலங்கையில் தனது தாயைத் தேடும் டென்மார்க் வாழ் இலங்கை இளைஞன்: ஊடகங்கள் மூலம் உருக்கமான வேண்டுகோள்

ஐரோப்பிய நாடான டென்மார்க்கில் வசித்து வரும் 40 வயதான டோர்டன் மேயர் (Torben Meyer) என்ற குடும்பஸ்தர் ஒருவர், தன்னைத் தத்துக் கொடுத்ததன் மூலம் பிரிந்த தனது உயிரியல் தாயைத் தேடி, ஊடகங்கள் மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக அவர் தனது தாயைத் தேடி வருகிறார்.

டென்மார்க் பெற்றோர் கொடுத்த ஆவணங்களின் அடிப்படையில் டோர்டன் மேயர் தனது தாயைத் தேடி வருகிறார். அந்த ஆவணங்களின்படி, அவருடைய உயிரியல் தாயின் பெயர்: முகமது சாலி மரிக்கார் சித்தி ஜெசிமா.

தாய்க்கு 21 வயதாக இருந்தபோது தான் பிறந்ததாகவும், தனக்கு ஒன்றரை வயதாக இருந்தபோது டென்மார்க் தம்பதிக்குத் தத்துக் கொடுக்கப்பட்டதாகவும் டோர்டன் குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்பில் ஒரு பணக்கார வீட்டில் பணிபுரியும் போது என் தாய் கர்ப்பமாக இருந்தார். பதிவுகளில் எனது உயிரியல் தந்தையைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தத்தெடுப்பு ஆவணங்களின்படி, தான் கோட்டையில் பிறந்ததாகவும், கொழும்பு காசல் வீதியில் உள்ள மருத்துவமனை அல்லது டி சொய்சா மகளிர் மருத்துவமனையில் பிறந்ததாக இரண்டு ஆவணங்கள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

தத்தெடுப்பு ஆவணங்களில் தனது பெற்றோரின் வசிப்பிடத்தின் குறிப்பிட்ட முகவரி இல்லாதது காரணமாகவே தனது தாயைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருப்பதாக டோர்டன் மேயர் தெரிவித்துள்ளார்.

உதவி கோரிக்கை

எனவே, தனது உயிரியல் தாய் அல்லது தனது உறவினர்கள் பற்றி ஏதேனும் தகவல் அறிந்தால், பெஷன் ரணசிங்கவை 0775000547 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புக் கொண்டு தெரிவிக்குமாறு டோர்டன் மேயர் உருக்கமான கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை