Welcome to Jettamil

அரியாலையில் அதிரடிப்படையினர் துப்பாக்கி சூடு – இளைஞன் படுகாயம்

Share

அரியாலை – நெடுக்குளம் பகுதியில் நேற்று மாலை பொலிஸ்  விசேட அதிரடிப்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

அரியாலை, நெடுக்குளம் பகுதியில் உழவு இயந்திரத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்ட உழவு இயந்திரத்தை விசேட  அதிரடிப்படையினர் மறித்த போது, நிறுத்தாமல் சென்றதால், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்தில் உழவு இயந்திரத்தில் பயணித்த ஒருவர் படுகாயமடைந்த நிலையில், கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரியாலை, முள்ளியைச் சேர்ந்த 27 வயதுடைய யசிந்தன் என்பவரே, காயமடைந்த நிலையில், பொலிஸ் காவலில் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். மணல் ஏற்றிச்சென்ற உழவு இயந்திரமும் பொலிசாரால், கைப்பற்றப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை