சுனாமி பேரலை அனர்த்தத்தின் 17 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது.
2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி, சுமாத்ரா கடலில் ஏற்பட்ட பாரிய பூகம்பத்தை அடுத்து, இலங்கை, இந்தியா உள்ளிட்ட தென்னாசிய நாடுகள் பலவற்றின் கரையோங்களை சுனாமிப் பேரலைகள் தாக்கின.
இந்த அனர்த்தத்தினால் இலங்கையில் சுமார் 40 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
பெருமளவு சொத்துக்கள் அழிந்து போயின.
சுனாமி பேரலை அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், இன்று நாட்டின் பல பாகங்களிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
பிரதான நிகழ்வு நிகழ்வு காலி சுனாமி நினைவிடத்திற்கு அருகில் இடம்பெறவுள்ளது.
இந்த அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில் இன்று காலை 9.25 மணியில் இருந்து 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கோரிக்கை விடுத்திருக்கிறது.