Welcome to Jettamil

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் ஜனாதிபதி – அமைச்சர் டக்ளஸ்

Share

கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் ஜனாதிபதி – அமைச்சர் டக்ளஸ்

கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக பயன்படுத்துவதே எனது வழமை. அதற்கிணக்க சுமார் மூன்று வருடங்களுக்கு பின்னர் ஐனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் பன்முகப்படுத்தப்பட்ட நிதியில் ஊடாக எமது மாவட்டத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்நிலையில் அதனை உச்ச பட்சமாக மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் பயன் படைத்துவதையே தான் விரும்புகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

அத்துடன் அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அதிகாரிகள் முதல் கொண்டு பொதுமக்களிடமும் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

வேலணை பிரதேச செயலகத்திலின்றையதினம் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை