Welcome to Jettamil

தொடருந்துகளில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு

Share

தொடருந்துகளில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிப்பு

தொடருந்துகளில் பொதிகளை அனுப்புவதற்கான கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்டணத் திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஒன்றும் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வர்த்தமானியில், இக்கட்டண அதிகரிப்பானது இன்று (01) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டணங்களை திருத்தம் செய்து, அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலானது கடந்த 18ம் திகதி போக்குவரத்த அமைச்சர் பந்துல குணவர்தனவினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 50 ரூபா குறைந்த பட்ச கட்டணம் 150 ரூபாயாக ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு (2024) பெறுமதி சேர் வரியில் ஏற்பட்ட அதிகரிப்பே இந்த கட்டண அதிகரிப்பிற்கு காரணம் என்று கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை