Welcome to Jettamil

ஆதித்யா எல்-1 விண்கலம் பூமியில் இருந்து 9.2 லட்சம் கி.மீ. தூரத்தை கடந்திருப்பதாக இஸ்ரோ தகவல்..!

Share

ஆதித்யா விண்கலம் பூமியிலிருந்து 9 லட்சத்து 20 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளதாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

பூமியின் தாக்கத்திலிருந்து ஆதித்யா விண்கலம் வெற்றிகரமாகத் தப்பியிருப்பதாக எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

எல்1 எனப்படும் சன் எர்த் லாக்ரேஞ்ச் பாயிண்ட் என்ற இடத்தை நோக்கி விண்கலம் தற்போது பயணித்து வருவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். பூமியின் தாக்கத்திலிருந்து வெளியேறும் இரண்டாவது விண்கலம் ஆதித்யா என்று குறிப்பிட்டுள்ள இஸ்ரோ விஞ்ஞானிகள், எல் 1ல் சேகரிக்கப்படும் தரவுகள் மூலம் சூரியக் காற்று, விண்வெளியின் தோற்றம் போன்றவற்றை அறிந்து கொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளனர்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை