Welcome to Jettamil

இரண்டாம் உலகப் போரில் மூழ்கிய 3 கப்பல்கள்- வெளியான புகைப்படங்கள்!

Share

இரண்டாம் உலகப் போரின்போது பசிபிக் பெருங்கடலில் மூழ்கிய ஜப்பானின் இரு விமானந் தாங்கிக் கப்பல்களையும் அமெரிக்காவின் ஒரு கப்பலையும் ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

மூழ்கிய ஜப்பானிய கப்பலை முதல்முறையாக வீடியோ பதிவு செய்துள்ளனர்.

மிட்வே சண்டை எனப்படும் இந்தத் தாக்குதலில் ஜப்பானின் இவ்விரு விமானந்தாங்கிக் கப்பல்களும் மூழ்கடிக்கப்பட்டதைத் தொடர்ந்துதான், ஜப்பான் வசமிருந்த பசிபிக் பெருங்கடலின் கட்டுப்பாடு அமெரிக்கப் படைகள் வசம் மாறியது.

1942 ஜூனில் நடந்த சண்டையில் மூழ்கடிக்கப்பட்ட அகாகி, காகா என்ற இரு ஜப்பானிய கப்பல்களும் அமெரிக்காவின் யுஎஸ்எஸ் யார்க்டவுன் என்ற கப்பலும் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4.8 கிலோ மீட்டர் ஆழத்தில் கிடப்பதைத் தற்போது கடலடித் தொல்லியல் ஆய்வில் நீர்மூழ்கிகள் கண்டறிந்து படம் பிடித்துள்ளன.

மேலும் கப்பல்களின் கடைசி நேரத்தில் இந்தச் சண்டையின்போது என்ன நடந்தது என்பதைத் தெரிந்து, தெளிந்துகொள்வதில் தற்போதைய ஆய்வின்போது எடுக்கப்பட்ட தெளிவான விடியோக்கள் உதவலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை