கிளிநொச்சியில் உயர்தரப் பரீட்சை கடமை: மதுபோதையில் இருந்த மேற்பார்வையாளர் பணி இடைநீக்கம்!
2025 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை நடைபெற்றுவரும் நிலையில், கிளிநொச்சியிலுள்ள பாடசாலை ஒன்றில் கடமையில் இருந்த பரீட்சை மேற்பார்வையாளர் (Exam Supervisor) ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்திற்கு உட்பட்ட பூநகரி நல்லூர் மகா வித்தியாலயத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கடந்த 20ஆம் திகதி நடைபெற்ற உயர்தரப் பரீட்சை கடமையின் போது, குறித்த மேற்பார்வையாளர் மதுபோதையில் இருந்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
மேற்பார்வையாளர் மதுபோதையில் இருந்தது தொடர்பாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சம்பவ இடத்துக்கு விரைந்த பரீட்சைத் திணைக்கள அதிகாரிகள் அவரை உடனடியாகப் பணியில் இருந்து நீக்கியுள்ளனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.





