ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் – வெளியாகிய அறிவிப்பு
பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர, எதிர்வரும் ஏப்ரல் மாதத்திற்குள் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளிவரும் என்று அறிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளுக்கு இடையே பல கட்டங்களாக மதிப்பீட்டுகள் மேற்கொள்ளப்படுவதாகவும், பரீட்சை பெறுபேறுகளை வெளியிட 4 மாதங்கள் தேவைப்படுவதாகவும் கூறினார்.
அவரின் கூற்றுப்படி, விரைவாக வெளியிட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், ஏப்ரல் மாதத்திற்குள் பெறுபேறுகளை வெளியிட முடியும் என்று அவர் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.