Monday, Jan 13, 2025

ஆனைக்கோட்டையில் மோட்டார் சைக்கிளும் அரச பேருந்தும் மோதி விபத்து

By Jet Tamil

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனைக்கோட்டை – கூழாவடி பகுதியில் அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிள் மோதி மாணவன் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிவிக்கையில்,

குறித்த தாயும் அவரது மகனான மாணவனும் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தவேளை அவ்வழியே சென்ற காரைநகர் – கண்டி போக்குவரத்து அரச பேருந்தின் பின் பக்கமாக மோதி இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் காயமடைந்த மகன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட பேருந்தினைய பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு