அதிபர் தேர்தலில் பெரமுனவின் போட்டியிடுவதற்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் விருப்பம் தெரிவித்துள்ளதாக சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த ஆண்டு அதிபர்தேர்தலை நடத்தினால், அதை எதிர்கொள்ளசிறி லங்கா பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக தெரிவித்தார்.
பல கோரிக்கைகள் வந்துள்ளன. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள் மற்றும் அதிபர்கள் கூட சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் கீழ் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர் என்றார்.