Thursday, Jan 16, 2025

தெற்காசியாவின் முதல் உயரமான சுழலும் உணவகம் கொழும்பில்

By Jet Tamil

கொழும்பில் அமைந்துள்ள தாமரை கோபுரத்தில் முதலாவது சுழலும் உணவகத்தை தனியார் நிறுவனமொன்று டிசம்பர் 09 ஆம் திகதி திறக்க தீர்மானித்துள்ளது. அதன்படி, சிட்ரஸ் ஹோட்டல் குழுமத்துடன் இணைந்து இந்த உணவகம் பொதுமக்களுக்கு திறக்கப்படவுள்ளது.

கொழும்பு தாமரை தடாகத்தில் உள்ள சுழலும் உணவகம் தெற்காசியாவின் மிக உயரமான இடத்தில் அமைந்துள்ள முதல் சுழலும் உணவகமாக கருதப்படுகிறது. இதனை பொதுமக்களுக்கு திறந்து வைப்பது குறித்து அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பும் இன்று நடைபெற்றது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு