Welcome to Jettamil

நேபாளத்தில் விபத்துக்குள்ளான விபத்தில் இருந்த 21 பேரில் சடலங்கள் மீட்பு

Share

நேபாளத்தில் விபத்தில் சிக்கிய விமானத்தில் பயணம் செய்த 21 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. நேபாளத்தில் தாரா எயர் நிறுவனத்தின் ‘ விமானம் நேற்றுமுன்தினம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது.

சில மணி நேர தேடுதலுக்குப் பின்னர், விமானம் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது.அப்பகுதியில் மீட்பு பணியில் ஈடுபட்ட ராணுவத்தினர்,  இதுவரை 21 சடலங்களை மீட்டுள்ளனர்.

விபத்துக்குள்ளான விமானத்தில் 4 இந்தியர்கள், 2 ஜெர்மனியர்கள், 13 நேபாள பயணிகள் மற்றும் 3 விமான ஊழியர்களும் பயணித்தனர்.

இதுவரை 21 பேர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள நிலையில், எஞ்சிய ஒருவரின் உடலை மீட்கும் பணியில் மீட்புக்குழு தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை