Welcome to Jettamil

கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடைவிதித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவு

Share

காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி 50 இலட்சம் ரூபா லஞ்சம் பெற்றுக்கொண்டு 263 சீனர்களுக்கு விசா வழங்கியதாக கார்த்தி சிதம்பரம் மீது வழக்குப் பதிவு செய்த சிபிஐ, அவருக்குத் தொடர்புடைய 10 இடங்களில் கடந்த வாரம் சோதனை நடத்தியது.

இதையடுத்து கார்த்தி சிதம்பரத்தை கைது செய்வதற்கு மே 30ஆம் திகதி வரை தடை விதித்து டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில், அமலாக்கத்துறை கைது செய்வதற்கு தடைவிதிக்க  கோரி, டெல்லி நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் அளித்த மனுவை விசாரித்த நீதிபதி, ஜூன் 3-ம் திகதி வரை கைது செய்ய தடை விதித்துள்ளது.

அமலாக்கத்துறை பதிவு செய்த வழக்கில் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்காலத்தடை நீடிக்கப்பட்டுள்ளது. கார்த்தி சிதம்பரத்தின் முன் பிணை மனு மீது 3-ம் திகதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை