Welcome to Jettamil

உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்கிய சிறுவன் உயிரிழப்பு

Share

வவுனியா – நெடுங்கேணி பிரதேசத்தில் வீட்டில் உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சிக்குண்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுவன் நேற்று முன்தினம் யாழ்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பனையாண்டான் நெடுங்கேணியினை சேர்ந்த மூன்றரை வயதுடைய சிவலோகநாதன் விந்துஜன் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த மாதம் 21ஆம் திகதி உழவு இயந்திரத்தின் கலப்பைக்குள் சென்று சிக்குப்பட்ட நிலையில் விபத்தினை சந்தித்துள்ளார்.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவன் அருகில் உள்ள வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதான வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலே உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை