இன்று காரைநகர் களபூமியில் இருந்து யாழ்ப்பாணம் செல்லும் வலந்தலையினை அண்மித்த மதவடி பகுதியில் விபத்து சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. இன்று காலை 7.30 மணியளவிலேயே குறித்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 786 ஆம் இலக்க பேரூந்து வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது. இவ் விபத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.