Welcome to Jettamil

யாழில் பேருந்து மோதி இளைஞன் கவலைக்கிடம்..!

Share

யாழில் பேருந்து மோதி இளைஞன் கவலைக்கிடம்..!

இளைஞன் ஒருவன், காரைநகர் – கொழும்பு பேருந்து விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

இன்று காலை, பாடசாலை ஒன்றின் மரதன் ஓட்டப்போட்டி நடைபெற்றது. இதில் மரதன் ஓடிய வீரருக்கு உற்சாகம் ஊட்டுவதற்கு அவருக்கு அருகே குறித்த இளைஞன் துவிச்சக்கர வண்டியில் பயணம் செய்துள்ளார்.

இதன்போது, மீசாலை பகுதியில் வைத்து அவர் மீது பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அத்துடன் அவரை மோதிய பேருந்து வேக கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள தென்னைமரத்துடன் மோதியது.

இதனால், குறித்த இளைஞன் ஆபத்தான நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

சாவகச்சேரி பொலிஸாரினால் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை