பாடசாலை மாணவர்களுக்கு கல்வி அமைச்சு மகிழ்ச்சியான அறிவிப்பு
கல்வி அமைச்சு, பாடசாலை மாணவர்களின் புத்தகப்பையின் எடையைக் குறைக்க தீர்மானித்துள்ளது. இதனால் மாணவர்களுக்கு முதுகெலும்பு கோளாறுகள் போன்ற பல உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினர் எச்சரித்துள்ளனர்.
இதனால், மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது பற்றி கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயற்பாட்டின் ஒரு பகுதியாக, தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.