டிரம்பின் கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் கருத்துக்கு கனடா பதிலடி
அமெரிக்கா மற்றும் கனடாவை ஒன்றிணைக்க “பொருளாதார சக்தியை” பயன்படுத்தப் போவதாக டொனால்ட் டிரம்ப் வெளியிட்ட கருத்துக்கு பதிலடி அளித்துள்ள கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, “அதற்கு வாய்ப்பே இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்ற பிறகு, கனடா அமெரிக்காவின் 51வது மாகாணமாக மாறுவது குறித்த பல தடவைகள் கூறியுள்ளார். தனது மாரா லாகோ இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “கோடுகள் நீக்கப்படும்போது, அது உங்களின் தேசிய பாதுகாப்புக்கு உதவும்,” என்றார்.
அமெரிக்கா-கனடா எல்லையில் பாதுகாப்பு அதிகரிக்க நடவடிக்கை எடுக்காத பட்சத்தில், கனடா பொருட்களுக்கு “கணிசமான வரி” விதிக்கப்படும் என டிரம்ப் அச்சுறுத்தியுள்ளார். இது கனடாவின் அரசியலின் கடுமையான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
டிரம்பின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு பதிலாக, ட்ரூடோ அரசு, கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளுக்கு அத்தகைய முடிவுகள் பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை எடுத்துக் காட்டி, அமெரிக்காவிடம் எதிர் வரி விதிப்பது குறித்து பரிசீலனை செய்து வருகிறது.
பிரதமர் ட்ரூடோ தனது எக்ஸ் பதிவில், “எங்கள் இரு நாடுகளின் தொழிலாளர்களும் மக்கள் சமூகங்களும் பரஸ்பர பயனடைந்துவருகிறார்கள்” என்று குறிப்பிட்டார்.
மேலும், டிரம்ப், மெக்சிகோ மற்றும் கனடா எல்லைகளில் போதைப்பொருள் கடத்தல் குறித்த கவலை வெளியிட்டார், இதற்கு பதிலாக, கனடா அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.