Sunday, Jan 19, 2025

கட்டைக்காடு கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கூம்பு வடிவிலான கூடாரம்!

By kajee

கட்டைக்காடு கடற்பகுதியில் கரை ஒதுங்கிய கூம்பு வடிவிலான கூடாரம்!

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு கடற்பகுதியில் இரும்பாலான கூம்பு வடிவிலான கூடாரம் ஒன்று இன்று காலை (22.02.2024) கரையொதுங்கியுள்ளது.

மீன்பிடிப்பதற்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் இதனை அவதானித்து உடனடியாக வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு அறிவித்தனர்.

இரும்பால் ஆன குறித்த மிதக்கும் கூடாரத்தை கட்டைக்காடு மீனவர்கள் தங்களது முயற்சியால் கரைக்கு கொண்டுவருவம் மீனவர்களின் முயற்சி தோல்வியுற்றதால் கூடாரத்தை அகற்றும் முயற்சியில் வெற்றிலைக்கேணி கடற்படையினர் ஈடுபட்டு அதனை அப்புறப்படுத்தினர்.

அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கில் கரையொதுங்கிய இவ்வாறான கூடாரங்களில் தாய்லாந்து கொடி காணப்பட்டதோடு கரையொதுங்கிய இந்த கூடாரத்தில் எந்தவிதமான கொடியும் , காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு