Welcome to Jettamil

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் : அமெரிக்கா கடும் கவலை

Share

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் : அமெரிக்கா கடும் கவலை

இலங்கையில் புதிதாக நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் அமெரிக்கா புதன்கிழமை (24) தனது கடுமையான கவலைகளை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவர் ஜூலி சங் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியொன்றின் மூலம் குறித்த கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்தச் சட்டமூலமானது ஜனநாயக விழுமியங்கள் மற்றும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஆகிய இரண்டிலும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என எடுத்துக்காட்டினார்.

இலங்கையின் நிகழ்நிலை பாதுகாப்பு சட்டமூலத்தின் சாத்தியமான தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை கொண்டுள்ளது என்று தூதுவர் சங் கூறினார்.

அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலாக உள்ளது என்று தெரிவித்து, சட்டமூலத்தை கடுமையாக விமர்சிக்கும் சிவில் சமூகம் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவர் தனது கவலையை தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை