Welcome to Jettamil

பவதாரணியின் மறைவுக்கு பாடகி சின்மயி உருக்கம்

Share

பவதாரணியின் மறைவுக்கு பாடகி சின்மயி உருக்கம்

இசைஞானி இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி (47) உடல் நலக் குறைவால் வியாழக்கிழமை கொழும்பில் காலமான நிலையில் அவரின் மறைவிற்கு பிரபல பின்னணி பாடகி சின்மயி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாடகி சின்மயி தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

“நான் அறிந்த மிகச்சிறந்த மனிதர்களில் பவதாரிணியும் ஒருவர். மிகவும் அன்பான பெண். அவர் மறைந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது.

இளையராஜா, கார்த்திக் ராஜா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் இந்த இழப்பைத் தாங்கிக் கொள்ளக்கூடிய சக்தியைப் பெற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை