Welcome to Jettamil

சிறுமி ஆயிஷாவின் மரணம் – குற்றத்தை ஒப்புக்கொண்டார்  சந்தேகநபர்  

Share

9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குறித்த சிறுமியை தாமே கொலை செய்துள்ளதாக குற்றத்தை ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தில் 9 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டிருந்தார். கைது செய்யப்பட்ட நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம்
குறித்த சந்தேக நபர் தாமே கொலை செய்துள்ளதாக ஒப்புக்கொண்டுள்ளார்.

கடந்த 27 ம் திகதி காணாமல் போயிருந்த பண்டாரகம -அட்டுலுகம பிரதேசத்தைச் சேர்ந்த 9 வயதுச் சிறுமி அவரது  வீட்டின் அருகில் உள்ள சதுப்பு நிலத்தில் புதையுண்ட நிலையில்  பிரதேச மக்களால் சடலமாகக் மீட்கப்பட்டார் .இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை சுமார் 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, சிறுமியின் சடலம் பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதையடுத்து இன்று பிரதே பரிசோதனை இடம்பெற்றது.அதன் பிரகாரம் குறித்த சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தபடவில்லை என பிரேத பரிசாதனை வாயிலாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.நீரில் மூழ்கி அவர் கொல்லப்பட்டது தெரியவந்துள்ளது. உயிரிழந்த 9 வயது சிறுமியின் இறுதி சடங்கிற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை