Welcome to Jettamil

கடுகதி புகையிரதம் மோதி நபர் பலி – யாழில் சம்பவம்

Share

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் மோதுண்டு மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்

இன்று மதியம் 1:30 மணிக்கு யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன் மோதுண்டு  சம்பவ  இடத்திலேயே மோட்டார் சைக்கிளில் பயணித்த நபர் உயிரிழந்துள்ளார். குறித்த சம்பவம் யாழ்.கிழக்கு அரியாலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தைத் தொடர்ந்து ஆவேசமடைந்த பொதுமக்கள் குறித்த கடுகதி புகையிரத்தின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியதுடன் இறந்த நபரின் உடலை  புகையிரதத்தின் முன் வைத்து  போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக சில மணி நேரங்கள்  வரை குறித்த புகையிரதம் கிழக்கு அரியலையில் நிறுத்தப்பட்டிருந்தது.இதன் பின்னர் பொலிசாரும் ராணுவத்தினரும் வரவழைக்கபட்டு சரியாக மதியம்  15.13 மணிக்கு குறித்த கடுகதி புகையிரதம் தனது  கொழும்புக்கான பயணத்தை ஆரம்பித்தது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை