இந்தியாவின் பொருளாதாரம் இலங்கையைப் போன்று மாறி வருவதாக இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் கூறியதாக வெளியான செய்தி, உண்மைக்கு புறம்பானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையைப் போன்றே இந்தியப் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது என்று ரகுராம் ராஜன் கூறியதாக முகப்புத்தக பதிவு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பகிரப்பட்டு வருகின்றது.
எனினும் ரகுராம் ராஜன் இந்த கருத்தை வெளியிடவில்லை என்றும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் போன்று பொருளாதாரப் பிரச்சினைகளை இந்தியா எதிர்கொள்ளாது என்று கூறியிருந்ததாகவே, உண்மையை கண்டறியும் செய்தித்தளம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.
எனவே குறித்த முகப்புத்தக பதிவு இடுகையில் கூறப்பட்ட கூற்று தவறானது என்றும் குறித்த செய்தித்தளம் தெரிவித்துள்ளது.
இலங்கையைப் போன்று இந்தியாவின் பொருளாதாரம் சீரழிந்து வருகிறது என்று ரகுராம் ராஜன் அறிக்கை வெளியிட்டார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் குறித்த செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.