Friday, Jan 17, 2025

கட்டாரின் புதிய பிரதமராக மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்பு

By Jet Tamil

கட்டாரின் புதிய பிரதமராக  மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி பதவியேற்றுள்ளார்

இதுவரை பிரமராகவும் உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்த ஷேக் காலித் பன் கலீபா பின் அப்துல்அஸீஸ் அல் தானியின் ராஜினாமாவை கத்தார் ஆட்சியாளரான அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல் தானி ஏற்றுக்கொண்டுள்ளார் என அவரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுவரை வெளிவிவகார அமைச்சராக பதவி வகித்த மொஹம்மத் பின் அப்துல்ரஹ்மான் அல் தானி புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர் பதவியேற்றுள்ளார் எனவும் கட்டார் அரச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த வருடம் கத்தாரில் நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப்போட்டிக்கான அரசாங்க பாதுகாப்புக் குழுவுக்குத் தலைமை வகித்த ஷேக் கலீபா பின் ஹமட் பின் கலீபா அல் தானி புதிய உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

கத்தரின் அமீர் ஷேக் தமீம் பின் ஹமட் அல் தானி மற்றும் புதிய பிரதமர் அப்துல்ரஹ்மான் அல் தானி இருவரும் 42 வயதானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு