திட்டமிட்டபடி பெட்ரோல் ஏற்றிய கப்பல் நேற்றும் வந்து சேராத நிலையில், எரிபொருள் நெருக்கடி மோசமடைந்துள்ளது.
40 ஆயிரம் மெற்றிக் தொன் பெட்ரோலுன் வரும் கப்பல் மேலும் தாமதமாகியுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
முன்னதாக இந்தக் கப்பல், நேற்றுமுன்தினம் வரும் என அவர் அறிவித்திருந்தார்.
பின்னர், நேற்று வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கப்பலின் வருகை மேலும் தாமதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் கப்பல் வருவதில் மேலும் தாமதம் ஏற்படும் என விநியோகஸ்தர் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் விஜேசேகர தெரிவித்தார்.
குறித்த எரிபொருள் கப்பல் வருவதற்கான புதிய திகதி பின்னர் உறுதி செய்யப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
எரிபொருள் கப்பல் தாமதமாகியுள்ளமை தொடர்பாக மன்னிப்பு கோருவதாகவும், அமைச்சர் காஞ்சன விஜேசேகர மேலும் தெரிவித்துள்ளார்.