உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் எதிர்வரும் 21 ஆம் திகதி வியாழக்கிழமை, 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய தினங்களில் விவாதத்தை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு இணையாக தாக்குதல் குறித்த விசாரணைகளின் முன்னேற்றம் தொடர்பில் பாதுகாப்பு பிரிவினர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேற்றைய தினம் நீண்ட தெளிவுபடுத்தல் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் தலைமையில், பொலிஸ் பயங்கரவாத தடுப்பு பிரிவின் பிரதானி இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடயங்களை முன்வைத்துள்ளார்,
ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.