வடகிழக்கு ஆப்கானிஸ்தானின் ஜல்லபாத் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர்.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.3 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமையும் குறிப்பிடத்தக்கது.