விலை சூத்திரத்தின் பிரகாரம் 12.5 கிலோகிராம் எடை கொண்ட வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலையை இன்று நள்ளிரவு முதல் 113 ரூபாவால் குறைக்க லிட்ரோ நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, இதன் புதிய விலை 4,551 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன், இதன் விலை இதுவரை 4,664 ரூபாயாக இருந்தது.
மேலும், ஐந்து கிலோகிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 1,827 ஆக காணப்பட்டது.
இதுவரை அதன் விலை 1,872 ரூபாயாக பதிவாகி இருந்தது. ரூ.869 ஆக இருந்த 2.3 கிலோ கேஸ் சிலிண்டரின் விலை ரூ.21 குறைக்கப்பட்டு, புதிய விலை ரூ.848 என காட்டப்பட்டுள்ளது.