Welcome to Jettamil

இந்தோனேசியாவின் வடக்கு கடலில் உள்ள ஜாவா தீவில் நிலநடுக்கம்

Share

இந்தோனேசியாவின் வடக்கு கடலில் உள்ள ஜாவா தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் நேற்று (14) வட கடலில் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7 அலகுகளாக பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

632 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சுமார் 20 நிமிடங்களுக்குப் பிறகு ரிக்டர் அளவுகோலில் 5.5 ஆகப் பதிவான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் சிஎன்ஏ தெரிவித்துள்ளது.

சுரபயா, துபன், செமராங் மற்றும் பாலியின் டென்பசார் ஆகிய நகர்ப்புற மையங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நிலநடுக்கத்தால் இந்தோனேசியாவிற்கு சுனாமி அச்சுறுத்தல் ஏதும் இல்லை என அந்நாட்டின் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு சுனாமி அபாயம் ஏதும் இல்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை