உயிர்த்த ஞாயிறு பிரதான சூத்திரதாரி உயிருடன்…! சாரா ஜெஸ்மின் தொடர்பில் அமைச்சர் அதிரடி அறிவிப்பு
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் முக்கிய புள்ளியாகக் கருதப்படும் சாரா ஜெஸ்மின் உயிரோடு இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால இன்று நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சாரா ஜெஸ்மின் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்பட்ட தகவல்களில் உண்மையில்லை. அவர் உயிருடன் இருப்பதாகவும், அவரைப் பிடிப்பதற்கான விசாரணைகள் மிகவும் தீவிரமடைந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அவர் இந்தியாவில் இருப்பதாக ஏற்கனவே வெளியான செய்திகளை மறுத்த அமைச்சர், அவர் எங்கே இருக்கிறார் என்பது குறித்த இரகசியத் தகவல்கள் கிடைத்துள்ளதாகக் கூறினார்.
இந்தத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும், விசாரணைக்குத் தடையாக அமையும் என்பதால் அனைத்துத் தகவல்களையும் தற்போது பகிரங்கப்படுத்த முடியாது என அவர் சுட்டிக்காட்டினார்.





