உலகில் அதிகளவு தேயிலை இறக்குமதி செய்யும் நாடான பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது.
இந்த நிலையில், தேயிலை இறக்குமதி அரசாங்கத்திற்கு அதிக சுமையாக உள்ளதால் பொதுமக்கள் தேநீர் குடிப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று பாகிஸ்தான் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.
“பாகிஸ்தான் மக்கள் ஒரு நாளைக்கு ஓன்று அல்லது இரண்டு முறை மட்டுமே தேநீர் அருந்த வேண்டும்.
கடனை பெற்றே நாங்கள் தேயிலையை இறக்குமதி செய்கின்றோம். ” என்று திட்ட மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் அஷன் இக்பால் தெரிவித்துள்ளார்.